சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தல் வாக்களிப்பின் போது பல இடங்களில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டு கள்ள வாக்குகள் போடப்பட்டதாக அர சியல் கட்சிகள் தேர்தல் ஆணை யத்திடம் புகார் தெரிவித்தன. அதிகாரிகள் வாக்குப்பதிவு களைக் கணக்கிட்டபோது எண் ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தது தெரியவந்து இருப்ப தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தர்மபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும் கட லூர், திருவள்ளுர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து ஆய்வு நடந்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத் தியபிரதா சாஹூ தெரிவித்தார். ஆய்வு நடத்தும் அதிகாரிகள் தங்கள் அறிக்கையை டெல்லிக்கு அனுப்பியதும் அதன் அடிப்படை யில் மறுவாக்குப்பதிவு பற்றி முடிவுசெய்து அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றார் அந்த அதிகாரி. கலவரங்கள் நடந்த பொன் பரப்பியில் அமைதியான முறை யில் வாக்குப்பதிவு நடந்ததால் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய தேவை இல்லை என் றும் அவர் கூறினார்.
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு பற்றி ஆய்வு நடக்கிறது
1 mins read

