கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுடன் அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், இஸ்லாம்புர், கண்டி, ஹபிப்புர், பாட்பரா ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டமான ஏழாவது கட்ட தேர்தல் நடத்தப்படும் மே 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுவைத் திரும்பப்பெற மே 2ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்கு வங்காளத்தில் மே 19ல் ஐந்து சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
1 mins read

