‘ராகுல் சொன்னால் போட்டியிடுவேன்’

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்குப் பிராந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட அவர் தயாராக உள்ளார் எனத் தெரிகிறது. 
இப்போது வாரணாசியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் தலைவரும் தம்முடைய சகோதரருமான ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன் என பிரியங்கா கூறியுள்ளார். 
ஏற்கெனவே ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர். 
அப்போது வாரணாசியில் தாம் போட்டியிட வேண்டாமா என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியினரிடம்  பிரயங்கா காந்தி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon