பாலியல் வன்கொடுமை முயற்சி: இளம் பெண் மீது அமிலம் வீச்சு

பாலியல் வன்கொடுமை முயற்சி: இளம் பெண் மீது அமிலம் வீச்சு

1 mins read

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் 16 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆடவர்கள், அவர் மீது அமிலத்தை வீசினர். பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு அந்த பதின்ம வயது பெண்ணின் வீட்டிற்குள் நான்கு ஆடவர்கள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் அந்த இளம் பெண்ணும் அவரது தாயாரும் இருந்தனர். பெண்ணின் தாயாரிடம் துப்பாக்கியைக் காட்டி அந்த ஆடவர்கள் மிரட்டினர். அதையடுத்து, அந்த இளம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய அந்த ஆடவர்கள் முயன்றனர். இளம் பெண் கூச்சல் போட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடவர்கள் ஆத்திரமடைந்தனர். தங்கள் ஆசைக்கு இணங்காத அப்பெண்ணைத் தண்டிக்கும் வகையில் அவர் மீது அமிலத்தை வீசினர். இதன் காரணமாக அந்த இளம் பெண் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் தொடர்பாக பீகார் போலிசார் விசாரணை நடத்தினர். இதுவரை இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.