'பிரதமரானாலும் ஆகாவிட்டாலும் பயங்கரவாதிகளை ஒருகை பார்ப்பேன்'

'பிரதமரானாலும் ஆகாவிட்டாலும் பயங்கரவாதிகளை ஒருகை பார்ப்பேன்'

2 mins read
1d400701-a7f7-4e7a-baf7-5b8a7bb95dfa
குஜராத் மாநிலம் பட்டான் நகரில் பிரசாரம் செய்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அவரைக் கௌரவிக்கும் வகையில் பெரிய மாலை ஒன்றை அவருக்கு அணிவித்த பாஜகவினர். படம்: ராய்ட்டர்ஸ் -

அகமதாபாத்: இந்திய நாடாளு மன்றத் தேர்தலையொட்டி குஜராத் மாநிலம், பட்டான் நகரில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். "நான் இந்த மண்ணின் மைந்தன். இங்குள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது எனது மாநில மக்களின் கடமை. அப்படி செய்தால் மீண்டும் எனது ஆட்சி அமையும். "ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜக வுக்குக் கிடைக்கவில்லை என்றால் இது ஏன் நடந்தது? என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23ஆம் தேதி விவாதம் நடத்தப் படும். "மோடி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை என்று சரத்பவார் கூறுகிறார். அவருக்கே இது தெரியவில்லை என்றால் இம்ரான் கான் எங்கிருந்து தெரிந்துக்கொள்ளப் போகிறார்? பிரதமர் நாற்காலி நீடித்தாலும் இல்லாவிட்டாலும் நானா, பயங்கரவாதிகளா? யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்க்கப் போகிறேன்," என்று தமது உரையைக் கேட்க திரண்ட மக்களிடம் சூளுரைத்தார் பிரதமர் மோடி. அண்மையில் பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசினார். "மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலைக் கடைப் பிடிக்கிறது. "பல பயங்கரவாதத் தாக்குதல் களில் வாக்கு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பெயரில் விசாரணையைக் காங்கிரஸ் அரசு திசைதிருப்பியது. ஆனால் உரி யில் நிகழ்ந்த தாக்குதலுக்காக பாஜக அரசு துல்லிய தாக்கு தலையும் புல்வாமா தாக்குதலுக் காக பாலகோட் வான் தாக்குதலை யும் நடத்தியது. இந்த நாடு தேச பக்தி, வாக்கு பக்தி ஆகிய இரண்டு விதமான அரசியலையும் பார்த்துள்ளது," பாஜகவை பாராட்டியும் காங்கிரஸ் கட்சியைச் சாடியும் பேசினார் பிரதமர் மோடி.