டெல்லியில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

டெல்லியில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் இன்றைக் குள் வேட்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ‌ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏழு மக்களவைத் தொகுதி உள்ளன. இங்கு ஆறாவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக் கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை கூட்டணி உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த மாதம் 12ஆம் தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இம்மாதம் 23ஆம் தேதிதான் கடைசி நாள். இந்நிலையில், இன்றைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படு வார்கள் என்று டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ‌ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். ஏழு தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்துப் பேசிய அவர், ''அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை கட்சி தலைமை அறிவிக்கும். "நான் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிடத் தொண்டர்கள் விருப்பம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்துக் கட்சிதான் இறுதி முடிவு எடுக்கும்'' என்று கூறினார். இதனால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தனித்தே போட்டியிடும் என்பது உறுதி யாகியுள்ளது.