உசிலம்பட்டி: மக்களவைத் தேர்தலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் புதல்வர் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் வாக்காளர்களுக் குக் கொடுக்கப்பட்ட பணத்தைத் திருப்பிக்கேட்டு அதிமுக பேரா ளர்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சினையைக் கிளப்புவதாக புகார் கிளம்பி இருக்கிறது.
அதிமுகவினர் ஒரு வாக் குக்கு ரூ. 1,000 என்ற விகிதத் தில் பணம் கொடுத்ததாகவும் ஆனால் கடந்த சில நாட்களாக வீடுவீடாகச் சென்று கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டை சேர்ந்த பாக்கியம் என்ற மாது புகார் தெரிவிப்பதைக் காட்டும் ஒரு காணொளி இணை யத்தில் பரபரப்பாகி இருக்கிறது.
தங்கள் வீட்டில் உள்ள மூன்று வாக்குகளுக்காக அதிமுகவினர் ரூ.3,000 கொடுத்ததாகவும் தாங்கள் வாக்களித்துவிட்டதாக வும் அந்த மாது கூறுகிறார். இருந்தாலும் தாங்கள் வாக் களிக்கவில்லை என்று கூறி கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டு அதிமுகவினர் வீட்டுக்கு வந்து பிரச்சினை செய்ததால் ரூ. 3,000ஐ தாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் தெரி வித்து அந்த மாது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

