4 தொகுதிகளில் 5 கட்சிகள் போட்டி

4 தொகுதிகளில் 5 கட்சிகள் போட்டி

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடக்கவிருக் கும் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன் றம், அரவக்குறிச்சி, சூலுர் ஆகிய நான்கு தொகுதி இடைத் தேர்தல்களை, அண்மையில் நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலைவிட மிக முக்கிய மானதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

அந்த நான்கு தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி நடக்க உள்ளது. அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் அந்த இடைத்தேர்தலைச் சமா ளிக்க ஆயத்தமாகி வருகின்றன. ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்து இருக்கும் திமுக, மே 1 முதல் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறது. அதிமுக கட்சி நேற்று நேர்காணலை நடத்தியது.

முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் (திருப்பரங்குன்றம்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார் (சூலூர்), முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் (ஒட்டப்பிடாரம்), சாகுல் ஹமீது (அரவக்குறிச்சி) ஆகியோர் தன் கட்சி சார்பில் போட்டியிடுவார் கள் என்று அமமுக நேற்று அறி வித்தது. அதிமுக நேற்று வேட் பாளர்களை அறிவிக்க இருந்தது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இனிமேல்தான் அறிவிக்கவிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று அந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங் கியது. வரும் 30ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய் யலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த நான்கு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படைகளும் கண் காணிப்புக் குழுக்களும் ஏற் கெனவே அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 22 சட்டமன்றத் தொகுதிகள் காலி யாக இருக்கின்றன. அவற்றில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதனிடையே, அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு வரும் 23 வழிகளில் சோதனைச் சாவடி அமைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.