அமமுகவை தனி கட்சியாக பதிந்தார் தினகரன்

அமமுகவை தனி கட்சியாக பதிந்தார் தினகரன்

1 mins read

சென்னை: அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுகவைத் தனிக் கட்சியாக பதிவு செய்தார். பெதுச்சின்னம் வேண்டும் என்றால் அமமுகவைத் தனி கட்சியாக பதிவுசெய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெவித்திருந்தது. இந்நிலையில், அமமுகவைப் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தினகரன், சில நாட்களுக்கு முன் அமமுகவின் பெதுச் செய லாளராகப் பெறுப்பேற்றார். அண் மையில் நடந்து முடிந்த தேர்தல் களில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாமல் தனி அமைப் பாக இருந்ததால் பெதுவான சின்னத்தைப் பெறுவதில் அமமுக வுக்குப் பிரச்சினை இருந்தது. இருந்தாலும் தனி கட்சியாக அமமுக பதியப்படும் என்று உத்ர வாதம் அளிக்கப்பட்டதை அடுத்து அக்கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.