இந்திய கடலோரக் காவல்படை கண்காணிப்பு தீவிரம்

இந்திய கடலோரக் காவல்படை கண்காணிப்பு தீவிரம்

1 mins read

புதுடெல்லி: இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் கடல் மார்க்கமாக தப்பி இந்தியா வுக்குள் நுழையும் வாய்ப்பு இருப் பதால் இந்திய கடலோரக் காவல் படை விழிப்பு நிலையில் வைக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண் டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டபோது பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த கொடூரக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐத் தொட்டுள் ளது.

மேலும் 500 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் விமான நிலையம் போன்ற முக்கிய இடங் களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இதற்கிடையே தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்ற வாளிகள் கடல் மார்க்கமாகத் தப்பிச்செல்லலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியக் கடலோரக் காவல் படையில் பாதுகாப்பு ஏற் பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக இந்திய-இலங்கை எல்லையில் கண்காணிப்புப் பாது காப்பு விமானமான 'டார்னியர்' சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளது.