ரஃபேல்; திருடன் என்று கூறியதற்காக வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி

புதுடெல்லி: காவலாளி எனக் கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன் தெரிவித் தார். இதன் தொடர்பில் தொடுக்கப் பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் தது.
அப்போது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங் களையும் நாளேடு ஆதாரங் களையும் ஏற்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. விரைவில் ரஃபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந் தது.

இந்நிலையில் அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப் பந்த தீர்ப்பு குறித்து செய்தி யாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "காவலாளி எனக் கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதி மன்றமே கூறிவிட்டது," என்றார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்து நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப் பாக வெளியானது.

இதையடுத்து பாஜகவைச் சேர்ந்த டெல்லி நாடாளுமன்ற உறுப்பினரான மீனாட்சி லெகி உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று மாற்றி, அரசியல் சாயம் பூசி, பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன் படுத்தியுள்ளார் என்று ராகுல் காந்திக்கு எதிரான மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றம் ராகுல்காந்தி பயன்படுத்திய வார்த்தைகளை கூறவில்லை என்றும் பாஜக எம்பி தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த 15ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ராகுல் காந்தி கூறிய கருத்துகளைப் போல் தெரிவிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி நீதிமன்றத்தின் கருத்துகளை தவறாக ஊடகங் களிடமும் மக்களிடமும் தெரிவித் துள்ளார் என்றும் கூறினர்.
இதையடுத்து ராகுல் காந்தி தனது பேச்சுக்கு இம்மாதம் 22ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

"ரஃபேல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அளித்தபோது பிரசாரத்தில் இருந்தேன். தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண் டன. நீதிமன்றத்தின் உத்தரவு களை, மாண்புகளை மதிக்காமல் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை.

"பிரதமர் மோடிகூட தனது பிர சாரத்தில் ரஃபேல் விவகாரத்தில் தங்களுடைய அரசு எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது என்று பேசியிருந்தார். அதே சமயத்தில் என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்," என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!