லக்னோ: நேற்றைய வாக்குப்பதிவின் போது மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், வாக்கு போடுவதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் (வயது 55) என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே தும்கல் தொகுதியின் 7வது வார்டில் அடையாளம் தெரியாத நபர் வீசிய வெடிகுண்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மூவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

