புதுடெல்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக சதி நடக்கிறது என்று கூறிய உஸ்தவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞருக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
64 வயதான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச் சாட்டுகளைச் சுமத்தி உள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்குப் பிரமாண பத்திரமாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால், தன் மீதான குற்றச் சாட்டை தலைமை நீதிபதி திட்ட வட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு தொடர தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப் பட்டதாக உச்சநீதிமன்ற வழக்கறி ஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
அதில், அஜய் என்பவர் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர தன்னை அணுகி யதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக புகார் கூற, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் செய்தி யாளர்கள் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
ரஞ்சன் கோகாயை அப்பதவியி லிருந்து விலக வைக்க பல்வேறு சதித் திட்டம் நடப்பதாகவும் உஸ்தவ் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் விசா ரணையை ஒத்தி வைத்தது.

