தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என தகவல்

தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என தகவல்

1 mins read

சென்னை: நடிகர் சிவகார்த்தி கேயனை வாக்களிக்க அனும தித்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது நடிகர் சிவ கார்த்திகேயன் தனது வாக்கைச் செலுத்த தனது பகுதியில் அமைந்திருந்த வாக்குச்சாவடிக்கு சென்றிருந்தார். ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை.

எனினும் வேறொரு வாக்குச் சாவடியில் அவர் வாக்களிக்க முடியும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதே போல் சென்னையில் வேறு பலருக்கும் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதை வாக்கா ளர்கள் சுட்டிக் காட்டினர்.

இதனால் சர்ச்சை வெடித்தது. இந் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயனை வாக் களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.