4 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

4 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

1 mins read

சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் பா.க. செல்வம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா, சூலூர் தொகுதியில் வெ. விஜயராகவன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி ஆகியோர் போட்டியிட இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கு கடந்த 22ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று திமுக கட்சியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.