தினகரன்: அமமுகவில் சசிகலாவுக்கு பதவி

தினகரன்: அமமுகவில் சசிகலாவுக்கு பதவி

2 mins read
adbef6bf-9175-46dd-88d5-7bc4833dbcf7
-

சென்னை: சசிகலாவின் ஒப்புதலோடுதான் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டதாகவும் அவரை ஓரங் கட்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் கர்நாடகாவின் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்தார்.

தமிழக இடைத்தேர்தலில் நான்கு தொகுதிகளுக்கான வேட் பாளர்களை நிறுத்துவது, வெற்றி வாய்ப்பு என பல்வேறு அரசியல் விஷயங்களை இருவரும் அலசிய தாகக் கூறப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு சசிகலா எனக்கு வாழ்த்து சொன்னார். நன்றாக செயல்பட சொன்னார். கட்சி, சின்னம் தொடர்பாக ஏற்கனவே எங்களது வழக்கறிஞர் சசிகலாவிடம் கலந்து பேசினார். சசிகலாவின் ஒப்புதலோடுதான் அனைத்தும் நடைபெற்று வருகி ன்றன.

"எண்ணிக்கை அடிப்படையில் இரட்டை இலை சின்னம் பழனி சாமி-பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப் பட்டது. ஆனால் அதனை ஏற்காத ஆர்.கே.நகர் மக்கள் அவ்வணிக்கு தோல்வியைத் தந்தார்கள். தேர்தல் முடிவு வந்தவுடன் மீதமிருக்கிற உண்மையான தொண்டர்களும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.

"எங்கள் கட்சியில் சசிகலா வுக்காக தலைவர் பதவியை காலி யாக வைத்துள்ளோம். துணைத் தலைவரும் தற்போது வந்திருக் கிறார். எங்கள் கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலை வர் ஆகியவை தேர்ந்தெடுக்கப் படக்கூடிய பதவிகள். தலைவர் பதவியை சசிகலாவுக்காக காலி யாக வைத்திருக்கிறோம். அவர் வெளியில் வந்த பிறகு அது தொடர்பாக முடிவு செய்வார்.

"உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சீராய்வு மனுத்தாக்கல் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங் கும் பணியில் நாங்கள் இறங்கி விட்டோம். சசிகலா சீராய்வுப் பணியை மேற்கொள்வார்.

"ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்ட ணியால் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப் பட்டார். அது தொடர்பான வழக் கையும் அவர் தொடர்ந்து நடத்து வார். அதுபோல அதிமுக கட்சி தொடர்பான வழக்குகளையும் தொடர்ந்து நடத்துவார்," என்று கூறினார்.

இந்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் நேற்று சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.