‘மனைவியின் கையால் மாண்ட ரோஹித் திவாரி’

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வராக இருந்த என்.டி திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியை அவரது மனைவி கொன்று, தடயங்களை மறைத்த தாக போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாதம் 16ஆம் தேதி மூக்கில் ரத்தம் வழிந்தபடி மயங்கிய நிலையில் ரோஹித் இருப்பதாக அவரது அம்மாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற் கெனவே இறந்துபோனதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் மார டைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு சோதனையில் ரோஹித்தின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரோஹித் திவாரியின் மனைவி அபூர்வா, தலையணையால் அவரது முகத் தில் அழுத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை ஒப்புக்கொண்ட அபூர்வா வுக்கு இரண்டு நாள் போலிஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon