தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீதிமன்றக் காவலில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்

1 mins read

புதுடெல்லி: பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் யாசின் மாலிக்கை அடுத்த மாதம் 24ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்பகுதியில் செயல்படும் இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

அந்த அமைப்பின் தலைவரான யாசின் மாலிக், தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

யாசின் மாலிக்குக்கு எதிராக 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகவை அதிகாரிகள் அவரை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இம்மாதம் 22ஆம் தேதிவரை யாசினை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், நேற்று யாசினை அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.