மோடியை வரவேற்க குடிநீர் வீணடிப்பு; பிரியங்கா கண்டனம்

மோடியை வரவேற்க குடிநீர் வீணடிப்பு; பிரியங்கா கண்டனம்

1 mins read

லக்னோ: பிரதமரை வரவேற் பதற்காக குடிநீரை வைத்து சாலையைக் கழுவியதை வன்மையாக கண்டித்த பிரியங்கா காந்தி, மோடி இந்த நாட்டின் பிரதமர் அல்ல, அவர் பிரதம பிரசார மந்திரி என குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில (கிழக்கு) பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் பன்டேல்கன்ட் பகுதிக்குட்பட்ட சில தொகுதிகளில் நேற்று பேரணி, பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.

பன்டா நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா, "மோடி நாளை இங்கு வருவதால் மக்கள் பயன்படுத்த வேண்டிய பொதுக் குடிநீரை வைத்து பாஜகவினர் சாலைகளை கழுவி வருகின்றனர்.

"இந்த பன்டேல்கன்ட் பகுதியில் உள்ள ஆண், பெண், பள்ளிகளுக்குச் செல்லும் பிள்ளை கள், பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் என கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பலரும் பாதிக்கப்பட்டு தவித்துவரும் நிலையில், இந்த நாட்டின் பிரதம பிரசார மந்திரிக்காக குடிநீர் வீண டிக்கப்பட்டுள்ளது.

"இந்நிலையில், இந்த நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும், டெல்லியில் இருந்துவரும் பிரதமர் மோடியின் வருகைக்காக மக்களுக்கு பயன்படும் குடிநீரை இப்படி பாஜகவினர் வீணடிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது," என குறிப்பிட்டார்.