மோடி: தோல்வி பயத்தால் குறைகூறல்

ராஞ்சி: தேர்தல் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை எதிர்க்கட்சிகள் கார ணம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நான்காம் கட்டமாக, ஜார்க்கண் டில் இம்மாதம் 29 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது. 

அந்த மாநிலத்தைப் பொருத்த வரை பாஜக, ஜேஎம்எம் கட்சியின ரிடையே நேரடிப் போட்டி நிலவு கிறது. பாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் பிரிந்து சென்று, இத் தேர்தலில் லோக்ஜனசக்தி கட்சியுடன் சேர்ந்து, போட்டியிடுவது பாஜக வுக்கு பலவீனமாகக் கருதப்படு கிறது.

இருந்தாலும், அதனை பிரதமர் மோடியின் பிரச்சாரம் சரிக்கட்டி விடும் என பாஜக நம்புகிறது.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாகா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத் தில் பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகள் இதுவரை என்னை அவதூறாகப் பேசி வந்தன. ஆனால் நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள்மீது அவர்கள் குற்றம் சுமத்தத் துவங்கி உள்ளனர்,” என்றார்.

“தேர்தல் தோல்விக்கு மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த முடிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர் கள் தேர்வு சரியாக எழுதாவிட்டால், வீட்டிற்கு வந்து பேனா சரியாக இல்லை என்பது போன்ற காரணங் களை கூறுவதுபோல எதிர்க்கட்சி களின் நடவடிக்கை உள்ளது,” என்றும் அவர் கூறினார். 

மேலும், ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைப்போல 2014ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்தியா விலும் நிகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon