சுடச் சுடச் செய்திகள்

‘டிக் டொக்’ தடையை அகற்றிய நீதிமன்றம்

ஆபாசப் படைப்புகளால் பிள்ளைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘டிக் டொக்’ செயலி மீதான தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மீட்டுக்கொண்டுள்ளது. செயலியின் உரிமையாளரான ‘பைட்டானஸ்’ நிறுவனம் இடைக்கால அனுமதிக்காகச் செய்திருந்த விண்ணப்பத்தை அந்த நீதிமன்றம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுள்ளது.

உலகில் ஆக வேகமாக வளர்ந்துவரும்  திறன்பேசி சந்தையான இந்தியாவில் இப்போது மீண்டும் இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டலாம். ‘டிக் டொக்’ செயலியில் பரவும் ஆபாசப் படங்களாலும் காணொளிகளாலும் பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ‘பைட்டானஸ்’ நிறுவனம் உடன்படத் தவறினால் செயலி மீண்டும் தடை செய்யப்படலாம் என்று நீதிமன்றம் எச்சரித்தது.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon