சென்னை: தமிழகத்தைப் பொறுத்த வரை நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தல்களை முக்கியமானவையாகக் கருதி செயல்பட்டுவரும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சி களும் நடக்கவிருக்கும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் தர்ம சங்கடமான நிலையை எதிர் நோக்குவதாகக் கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் மே 19ஆம் தேதி நடக்கும் இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று தெரிகிறது.
அந்த நான்கு தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் இவற்றின் ஆதரவுக் கட்சிகள் கண்டும் காணாமல் பாராமுகமாக ஒதுங்கி வருவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் களுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகி கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்றும் இதனால் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அதிருப் தியில் இருப்பதாகவும் இந்த விவ காரத்தை காங்கிரஸ் மேலிடத்துக் குக் கொண்டுசெல்ல அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தக வல்கள் கசிந்துள்னன.
காங்கிரஸ் கட்சியினர் ஒத்து ழைப்புத் தராமல் போவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தினகர னின் அமமுக கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்ற சந்தேகமும் தங்களுக்கு ஏற்பட்டு இருப்பதாக திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இந்த இடைத் தேர்தல் ஆளும் அதிமுகவுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கு மென அந்தக் கட்சியினரே கூறு கிறார்கள். ஆட்சி நீடிக்க வேண்டு மானால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றாகவேண்டும் என்ற அவ சியம் ஏற்பட்டு இருக்கிறது.
அதிமுக அணியில் இடம்பெற்று இருக்கும் பல கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் ஒருமித்த கவ னத்தைச் செலுத்தி அதிமுகவிற்கு ஆதரவு திரட்டாமல் மெத்தனப் போக்குடன் இருப்பதாக ஆளும் கட்சியினர் கூறுகிறார்கள்.
கூட்டணிக் கட்சிகள் இப்போது மும்முரமான ஆதரவை அதிமுக வுக்குத் தருமா? அல்லது இந்த இடைத்தேர்தலில் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று அந்தக் கட்சிகள் ஒதுங்கிவிடுமா? என்று அதிமுக தலைவர்கள் சந் தேகப்படுவதாகத் தெரிகிறது.

