மோடி: இந்தியா­வின் மதிப்பு உலகள­வில் உயர்ந்­து­ள்­ளது

மோடி: இந்தியா­வின் மதிப்பு உலகள­வில் உயர்ந்­து­ள்­ளது

2 mins read
ae8cb766-f179-4868-ba3c-8f51b679da45
-

சென்னை: ஐந்து ஆண்டு­க­ளுக்கு முன்­னர் இந்தியா­வின் குரல் உலக அரங்கில் ஒலிக்க­வில்லை என்­றும் தற்போது இந்தியா­வின் குரலுக்கு மதிப்­புள்­ளது என்­றும் இந்தியப்­ பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்­துள்­ளார்.

பல்வேறு நாடு­க­ளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்கள்­தான் இத்தகைய மாற்­றத்துக்­குக்­ கார ணம் என்று மேற்கு வங்­கத்­தில் நடைபெற்ற பிரசாரக்­ கூட்­டத்­தில் பேசும்போது அவர் குறிப்­பிட்­டார்.

இந்தியா­வின் வலிமையை உலக நாடுகள் ஒப்­புக்­ கொண்ட தற்­கும் தமது வெளிநாட்டுப்­ பய ணங்களே காரணம் என்­றும் அவர் மேலும் தெரிவித்­துள்­ளார்.

பிரதமர் இந்தியா­வில் இருப்­ பதே இல்லை, விமானத்­தில் சுற்றி­ யபடியே உள்­ளார் என்று எதிர்க்­ கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து ­வரும் விமர்ச­னத்துக்கு மோடி தமது பேச்­சின் மூலம் பதிலடி கொடுத்­தார்.

"மக்களவைத்­ தேர்த­லில் 20 முதல் 25 தொகுதி­க­ளில் போட்டி யிடும் கட்சித்­ தலை­வர்கள் கூட இந்நாட்­டின் பிரதமர் ஆகிவிட வேண்­டும் என்று நினைக்­கின்ற­னர்.

"தேநீர் விற்ற­வர் கடந்த ஐந்து ஆண்டு­க­ளாக வெளிநாட்டுப்­ பயணம் மேற்கொள்வதிலேயே முனைப்பாக இருந்­தார் என்று மேற்கு வங்க முதல்­வர் விமர்சிக்­ கிறார்.

"தற்போது மூன்றாம் கட்ட வாக்­குப்பதிவு நடந்த பிறகு மேற்கு வங்­கத்­தில் மம்தா பானர்ஜி­யின் சூரி­யன் மறையப்­ போகிறது என்று தகவல்கள் தெரிவிக்­கின்றன," என்­றார் பிரதமர் மோடி.

மம்தாவை தமது உரை­யில், 'தீதி' என்று அவர் குறிப்­பிட்­டார். இதற்கு இந்தி­யில் மூத்த சகோதரி என்று அர்த்தமா­கும்.

தீதியிடம் குண்டர்கள் பலம் இருப்பதாகக்­ குறிப்­பிட்ட அவர், தங்களிடம் ஜனநாய­கம் என்ற பலம் இருப்பதாகக்­ கூறி­னார்.

தேர்தல் நியாய­மான முறை­யில் நடக்­கிறது என்பதால் தேர்தல் ஆணையம் மீது மம்தா பானர்ஜி கோபமாக இருப்பதாக­வும் மக்­ களவைத்­ தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்­தும் தேர்தல் ஆணை­யத்துக்கு ­நன்றி­ தெரிவிப்­ பதாக­வும் பிரதமர் மோடி தமது உரை­யில் மேலும் குறிப்­பிட்­டார்.