உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணைக்­ குழுவிலிருந்து நீதிபதி விலகல்

உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணைக்­ குழுவிலிருந்து நீதிபதி விலகல்

2 mins read

புதுடெல்லி: உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதிபதி ரஞ்­சன் கோகோய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்­கும் நீதிபதிகள் குழு­வில் இருந்து உச்ச நீதி­மன்ற நீதிபதி ரமணா விலகியுள்­ளார்.

அவ­ரது இம்முடிவை வரவேற் பதாக தலைமை நீதிபதி மீது புகார் தெரிவித்­துள்ள பெண்­ணின் வழக்கறிஞர் தெரிவித்­துள்­ளார்.

உச்ச நீதி­மன்ற தலைமை நீதிபதி ரஞ்­சன் கோகோய் மீது அவரிடம் உதவியாளராகப்­ பணி யாற்றிய 35 வயது பெண் ஊழி­யர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்­படுத்தி உள்­ளது.

இதை­யடுத்து, அந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று நீதி பதிகள் கொண்ட குழு அமை­க்­கப் பட்டது. எனி­னும் அக்­குழு­வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி­யின் குடும்ப நண்பரைப்­ போன்ற­வர் என்பதால் அவர் விசாரணைக்­ குழு­வில் இடம்பெறக்கூடாது என புகார் எழுப்­பிய பெண்மணி தரப்­பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலை­யில், விசாரணைக்­ குழு­வில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்­ளார்.

இதற்கிடையே, பணம் மற்­றும் அதிகாரம் படைத்த­வர்கள் நீதித் துறையை ஒருபோ­தும் கட்டுப்­ படுத்த முடியாது என உச்சநீதி மன்றம் காட்டமாக தெரிவித்­ துள்­ளது.

மே­லும் கடந்த சில ஆண்டு க­ளாகவே நீதித்துறை மீது இது போன்ற தாக்­குதல்கள் நடந்து வரு­கின்றன. இது தொடர்பாக கடுமை­யான முடிவு எடுக்­கும் நேரம் இப்­போது வந்­து­விட்டது என்­றும் உச்ச நீதி­மன்றம் கூறி­ இருக்­கிறது.

தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்­ சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலை­யில், உச்ச நீதி­மன்றம் இத்தகைய கருத்தை வெளிப்­ படுத்­தியுள்­ளது.