சுடச் சுடச் செய்திகள்

ராகுல்: விவசாயிகள் கௌரவமாக வாழ தனி வரவுசெலவுத்­ திட்டம்

லக்னோ: ஐந்து கோடி குடும் பங்­க­ளுக்கு ஆண்டுதோ­றும் தலா ரூ.72,000 நிதி உதவி வழங்கு வதாக அளி­க்­கப்பட்ட வாக்­குறு தியை காங்கிரஸ் கட்சி என்ன விலை கொடுத்­தாவது நிறைவேற் றும் என அதன் தலை­வர் ராகுல் காந்தி தெரிவித்­துள்­ளார்.

­மத்தி­யில் காங்கிரஸ் மீண்­டும் ஆட்சிக்கு வந்தால் விவசா­யத் திற்கென தனியாக வரவுசெலவுத்­ திட்ட அறிக்கை தாக்கல் செய் யப்­படும் என்று அவர் கூறியுள்­ளார்.

உத்தரப்­ பிரதே­சத்­தில் நடந்த தேர்தல் பிரசாரக்­ கூட்டங்­க­ளில் கலந்­து­கொண்டு பேசிய அவர், தற்போது ரூ.20 ஆயிரம் வங்கிக்­ கட­னைத் திருப்­பிச்­ செலுத்­தத் தவறினால்கூட விவசாயிகள் சிறை­யில் தள்ளப்­படுவது வேதனை அளிப்பதாகக்­ குறிப்­பிட்­டார்.

“விவசா­யத்­திற்கென தயாரிக்­ கப்­படும் பட்ஜெட் இத்தகைய அராஜகங்கள் அனைத்­துக்­கும் நிச்சயம் ஒரு முடிவு கட்­டும். விவ சாயிகள் கௌரவ­மான முறை­யில் வாழ வழி ஏற்­படுத்­தித்­ தரும். 

“காங்கிரஸ் ஆட்சி­யில் ஒரு பொது பட்ஜெட்­டும் விவசா­யத் திற்குத்­ தனி பட்ஜெட்­டும் தாக்கல் செய்யப்­படும்,” என்­றார் ராகுல் காந்தி.

ரூ.15 லட்சம் தருவதாகக்­ கூறி­ பிரதமர் மோடி ஏழை­களை ஏமாற்றி­ விட்டதாகக்­ குறிப்­பிட்ட அவர், பண மதிப்­பிழப்பு நடவடிக்கை நாட்டைப்­ பெரி­தும் பாதித்துள்ள தாகக்­ கூறி­னார்.

“நாட்­டில் நிலைமை வேகமாக மாறி­ வருகிறது. காவலாளி ஒரு திரு­டன் என்று குஜ­ராத்­ மக்­கள் கூட கூறத் தொடங்கிவிட்­டனர்,” என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon