குழந்தை­களைக்­ கடத்தி விற்ற எழு­வர் கும்பல் பிடிபட்டது

குழந்தை­களைக்­ கடத்தி விற்ற எழு­வர் கும்பல் பிடிபட்டது

1 mins read

ஹைதரா­பாத்­: பெண்கள் நால்­வர் உட்­பட எழு­வர் அடங்கிய குழந்தைக்­ கடத்தல் கும்பலை ஹைதரா­பாத்­ போலி­சார் கைது செய்து உள்­ளனர். ஆந்திரா, தெலுங்­கானா மாநிலங்க­ளின் பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்­படுவதாகக்­ கிடைத்த தகவலை அடுத்து இரு மாநில போலிசா­ரும் தீவிர விசாரணை மேற்கொண்ட­னர். அ­தன் முடி­வில் இந்தக்­ கும்பல் சிக்­கியது. இவர்கள் இரண்டரை வயதுக்­குட்­பட்ட மூன்று குழந்தை­களைக்­ கடத்தி, ரூ.3 லட்சம் வரை விலை பேசி, குழந்தை­யில்­லாத்­ தம்பதியரிடம் விற்பனை செய்­தது விசாரணை­யில் தெரியவந்­தது. குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படை­க்­கப்பட்­டனர். விசாரணை தொடர்கிறது.