வாரணாசி: மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட­வில்லை

வாரணாசி: மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட­வில்லை

1 mins read

வாரணாசி: வாரணாசி மக்களவைத்­ தொகுதி­யில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி களமிற­க்­கப்­படு­வார் எனும் ஆரூடம் பொய்த்­துப்­ போயுள்­ளது. இம்முறை மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்­பில் அஜய் ராய் களமிற­க்­கப்பட உள்­ளார். இவர் கடந்த முறை­யும் இதே தொகுதி­யில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப்­ பிடித்­தார்.