இந்துக்களின் புனிதத்தலமான வாரணாசி நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேரணியில் பங்கெடுத்ததை அடுத்து, இன்று காலை தமது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியை 2014ஆம் ஆண்டில் வென்ற திரு மோடி, மீண்டும் அதனைக் கைப்பற்ற முயல்கிறார்.
பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ திரு மோடி நேற்று அனைவருக்கும் கைகூப்பி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடன் கட்சித் தலைவர் அமிட் ஷா, உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இருந்தனர்.
தமது நியமனப் பத்திரங்களைத் திரு மோடி இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய இந்தியப் பொதுத்தேர்தல் மே 19ஆம் தேதி வரை நீடிக்கும். வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படும். தேர்தலின் கடைசி நாளில் வாரணாசியில் வாக்களிப்பு நடைபெறும்.

