புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பறந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்ட தால் மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது.
நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி நாடு முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர், மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியிலிருந்து பாட்னா விற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர்.
ஆனால் விமானத்தின் இயந் திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
இந்தத் தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சமஸ்திபூர், பலசோர், சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் பின்னர் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

