புதுடெல்லி: நடிகர் அக்ஷய் குமாருக்கு அளித்த பேட்டியில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் உள்ள நட்பு குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஒவ் வொரு ஆண்டும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகளை அனுப்புவார் என்று திரு மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். ஹுக்ளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய மம்தா, "விருந்தினர் களுக்கு இனிப்புகள், பரிசுப் பொருட்கள் கொடுத்து வரவேற்பது மேற்கு வங்காளத்தின் கலாசாரம். ஆனால் மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வாக்குக் கூட போட மாட்டோம்" என்றார். மம்தாவின் இந்தக் கருத்து பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மம்தா: இனிப்பு உண்டு, வாக்கு இல்லை
1 mins read

