பிரதமர்:ஆளும் கட்சிக்­கு ஆதரவாக அலை வீசுகிறது

பிரதமர்:ஆளும் கட்சிக்­கு ஆதரவாக அலை வீசுகிறது

2 mins read

வாரணாசி: வாரணாசி தொகுதி யில் வேட்­புமனுத்­ தாக்கல் செய் வதற்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, முதல் முறையாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அலை வீசு கிறது என்று கூறியுள்­ளார்.

"மோடி அரசாங்­கம்­தான் மீண் டும் வேண்­டும் என்பதை மக்­கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட் டனர்.

"கட்சி ஊழி­யர்கள்­தான் உண் மையான வேட்­பாளர்கள். காஷ்மீரி லிருந்து கன்னியாகுமரி வரை வழக்­கத்­திற்கு மாறாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அலை வீசு கிறது.

"இந்­தத் தேர்த­லில் இது­வரை இல்லாத சாதனை­களை கட்சித்­ தொண்டர்கள் நிகழ்த்தி காட்ட வேண்­டும்," என்று பிரதமர் மோடி வலியுறுத்­தி­னார்.

"தேர்தல் பிரசா­ரத்­தின்போது ஆண­வத்தோடு நடந்­து­கொள்ளா தீர்கள்.

"ஆண­வத்தோடு நடந்து கொண்ட­வர்­க­ளுக்கு 400 தொகு தியிலிருந்து 40க்கு குறைந்து விட்டது," என்று மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை அவர் சுட்டிக்­ காட்டி­னார்.

வாரணாசி­யில் உள்ள கால பைர­வர் கோவி­லில் சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து வேட்பு மனுத்­ தாக்கல் செய்ய பிரதமர் மோடி புறப்பட்­டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்­ தேர்த­லில் உத்தரப்­பிரதேச மாநிலம் வாரணா சியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்­குகள் வித்­தியா­சத்­தில் வெற்றிபெற்­றார்.

இந்­தத் தொகுதி­யில் மீண்­டும் களமிறங்கியுள்ள பிரதமர் மோடி நேற்று மாவட்ட ஆட்சி­யர் அலு வல­கத்­தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்­புமனுவை தாக்கல் செய்­தார்.

வேட்­புமனு தாக்க­லின்போது பாஜக தலை­வர் அமித்­ ஷா, மத்திய அமைச்சர் ராஜ்­நாத்­ சிங் மற்­றும் கூட்டணி கட்சிக­ளின் தலை­வர்கள் உடனிருந்­தனர்.

இதற்கிடையே வாரணாசி­யில் பிரதமர் மோடியை எதிர்த்து காங் கிரஸ் பொதுச்­ செயலாள­ரும் அக்­ கட்சித்­ தலை­வர் ராகுல் காந்தி­யின் சகோதரியு­மான பிரியங்கா காந்தி போட்டியிடக்கூ­டும் என்று எதிர் பார்­க்­கப்பட்ட நிலை­யில் காங் கிரஸ் வேட்­பாளராக அஜய் ராய் களம் காண்கி­றார்.