ரோகித்­ சேகர் கொலை; மனைவிக்கு காவல் நீட்டிப்­பு

ரோகித்­ சேகர் கொலை; மனைவிக்கு காவல் நீட்டிப்­பு

1 mins read

புதுடெல்லி: உத்தரகாண்ட் முன் னாள் முதல்­வர் என்.டி.திவாரி­யின் மகன் ரோகித்­ சேகர் திவாரி கொல்லப்பட்ட வழக்­கில் கைது செய்யப்பட்டுள்ள அவ­ரது மனை வியை 14 நாள் காவ­லில் விசாரிக்க நீதி­மன்றம் அனுமதி வழங்கியுள் ளது.

கடந்த 16ஆம் தேதி டெல்லி­யில் ரோகித்­ சேகர் இறந்து கிடந்­தார். பிரேத பரிசோதனை அறிக்கை­யில் அவ­ரது கழுத்து நெரி­க்­கப்பட்டிருப்­ பது தெரிய வந்­தது. இதனால் காவல்து­றை­யி­னர் வழக்­குப்­ பதிவு விசாரணை நடத்தி­னர். இதில் ரோகித்­ சேகர் மனைவி அபூர்வா மீது காவல்துறைக்கு சந்தே­கம் ஏற்பட்டது.

இந்த நிலை­யில் ரோகித்­தின் மனைவி அபூர்வா, உறவி­னர் களிடம் போலி­சார் விசாரணை நடத்தி­னர். இதற்கிடையே ரோகித்­ தின் தாயார் உஜ்வாலா காவல் துறை­யிடம் சில தகவல் களைத்­ தெரிவித்­தார். இதை அடிப்படையாக வைத்து மருமகள் அபூர்வாவிடம் போலி­சார் விசாரித்­ தனர். இந்த விசாரணை­யில் அபூர்வா முன்னுக்­கு­பின் முரணாக பதில் அளித்ததால் காவல்து­றையி னருக்கு சந்தே­கம் வலுத்­தது.

இதை­யடுத்து அபூர்வா கைது செய்யப்பட்டு இரண்டு நாள் விசாரணைக்­ காவ­லில் வைக்­கப் பட்­டார். இதற்கிடையே டெல்லி சாகேத்­ நீதி­மன்­றத்­தில் அபூர்வா திவாரி மீண்­டும் நேற்று முன்னி லைப்­படுத்தப்பட்­டார். விசாரணை முடியாததால் அபூர்வா திவாரியை 14 நாள் காவ­லில் வைக்க நீதி பதிகள் அனுமதி வழங்கி­னர்.