நீரவ் மோடி­யின் ஆடம்பரக்­ கார்கள் ஏலம் மூலம் விற்பனை

1 mins read

மும்பை: வங்கி­யில் பெருமள­வில் கடன் வாங்கி அதனை திருப்­பிச்­ செலுத்­தாமல் வெளிநாட்டுக்­குத்­ தப்­பியோடிய நீரவ் மோடி, மெகுல் சோக்சி­யின் சொகுசு கார்கள் ஏலம் விடப்­படு­கின்றன.

அர­சின் எம்எஸ்டிசி நிறுவனம் இதற்­கான அறிவிப்பை இணை­யத் தளத்­தில் வெளியிட்டுள்­ளது.

கா­ரின் ரகம், விலை போன்ற விவரங்கள் அதில் தெரிவி­க்­கப் பட்டுள்­ளது.

அதிக விலையை பதிவு செய்ப வர்­க­ளுக்கு அந்த கார்கள் ஏலத் தின் மூலம் விற்கப்­படும்.

மொத்தம் 13 சொகுசு கார்கள் மூலம் ரூ.3.29 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்­ளது.

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு நீரவ் மோடி­யின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்­டன. இதன் மூலம் வரு மான வரித்­துறைக்கு ரூ.54 கோடி கிடைத்­தது. அடுத்த கட்டமாக நீரவ் மோடி­யின் சொகுசு பங்க ளாக்­கள் ஏலம் விடப்­படும் எனத் தெரிகிறது.

இந்தியா­வின் பிரபல தொழில் அதிபர்­க­ளான நீரவ் மோடி­யும் மெகுல் சோக்சி­யும் பஞ்சாப்­ நேஷனல் வங்கி உள்பட பல வங்கி­க­ளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்­பிவிட்­டனர்.

இரு­வரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13,570 கோடி வரை கடன் வாங்கியுள்­ளனர்.

இதை­யடுத்து நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவ­ரின் நவீன பங்­க­ளா­க்­கள் முட­க்­கப்பட்­டன. மேலும் அவர்க­ளது அசை­யும், அசையா சொத்­துக்­களை­யும் அம லாக்­கத்து­றை­யி­னர் முடக்­கியுள் ளனர்.