'மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மறு தேர்தல் வேண்டும்'

'மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மறு தேர்தல் வேண்டும்'

1 mins read

மதுரை: மதுரை நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். "வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்­கும் மதுரை மருத்துவக் கல்லூரிக்குள் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் என மூன்று பேர் நுழைந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கிருந்துள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் நடராஜனும் தேர்தல் அலுவலர்­களும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்­கள். இது­குறித்து காவல்துறை ஆணையாளரும் எந்த நட­வடிக்­கை­யும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து முழுமை­யான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நட­வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்­கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்," என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.