'ஏர் இந்தியா' கணினி கோளாறு; சேவை பாதிப்பு

'ஏர் இந்தியா' கணினி கோளாறு; சேவை பாதிப்பு

2 mins read

ஏர்„இந்தியா நிறுவனத்தின் விமானச் சேவை கணினி கட்ட மைப்பில் (சர்வர்) ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் ஏர்„இந்தியா நிறுவன விமான சேவை நேற்று சுமார் 6 மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த கோளாறு காரணமாக உலகம் முழுவதுக்குமான அந்த நிறுவனத் தின் சேவை பாதிப்புக்குள்ளானது. அதனால், பயணிகளுக்கு விமா னத்தில் நுழைவதற்கான அனு மதிச் சீட்டு வழங்க முடியாமல் போனது.

விமான சேவை பாதிப்பால் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வரும் காணொளிகள் இணையதளத்தில் பரவின.

இதுகுறித்து டுவிட்டரில் அறிக்கை வெளியிட்ட 'ஏர் இந்தியா', பயணிகளின் சிரமத் துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அட்லாண்டாவில் உள்ள, விமானப் போக்குவரத்து தகவல் தொழில்நுட்பச் சேவையை நிர்வகிக்கும் எஸ்ஐடிஏ நிறுவனத் தில் கோளாறைச் சரி செய்யும் பணி துரிதமாகப் பணியாற்றி வருவதாகவும் அது குறிப்பிட்டது.

நேற்று காலை விமான சேவை 8.45 மணி அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியதாகத் தெரி வித்த அந்த நிறுவனம் மாற்றி அமைக்கப்பட்ட விமான போக்கு வரத்து நேரத்தையும் வெளியிட் டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி இதுபோன்ற தொரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகளின் உடை மைகளைப் பதிவுசெய்ய இயலாமல் போனதுடன் 25 விமானச் சேவை கள் பாதிக்கப்பட்டன.