வங்கி மோசடி: அறுவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

வங்கி மோசடி: அறுவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

2 mins read

மும்பை: வங்கி மோசடியில் ஈடுபட்ட ஆறு பேருக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 'பேங்க் ஆஃப் இந்தியா'வின் முன்னாள் உதவி பொது மேலாளர், கணக்காளர் ஆகியோரும் ஒரு தந்தையும் மகனும் இந்த அறுவருள் அடக்கம். அதற்கு முந்தைய நாளும் அந்த நீதிமன்றம், வங்கி மோசடியில் ஈடுபட்ட வேறு ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

அந்தேரி பகுதியில் வர்த்தகம் புரிந்துவந்த மனோகர்லால் அஹுஜா, 65, அவரது மகன் அமிட் அஹுஜா, 39, ஆகியோர் 19 ஆண்டுகளுக்கு முன்பு தங்க ளுக்குச் சொந்தமில்லாத ஒரு நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அதனைப் பிணையாக வைத்து 1.5 கோடி ரூபாய் கடனாகவும் ஒரு கோடி ரூபாய்க் கான கடன் பற்றுக் கடிதங்களையும் 'பேங்க் ஆஃப் இந்தியா'விட மிருந்து பெற்று மோசடி செய்ததன் தொடர்பில் நடத்தப்பட்ட வழக் கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

அவர்கள் போலி ஆவணம் தயாரித்த நிலம் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காகப் பயன் படுத்தும் வெர்சோவா பூங்கா.

இவ்விரு அஹுஜாக்களுடன் சேர்த்து, உரிய ஆவணங்களைச் சரிபார்க்காமல் கடன் வழங்கிய அந்த வங்கியின் முன்னாள் அதிகாரி பகவான்ஜி ஜோ‌ஷி, 73, போலியான பெயரில் பிணைக் கையொப்பமிட்ட சதேஷ நாகே, 51, போலி நிதி ஆவணங்கள் வழங்கிய கணக்காளர் மகேஷ் போரா, 63, போலி ஆவணங்களை உருவாக்கிய நில விற்பனையாளர் சாந்திலால் சௌஹான், 66, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிணைச் சொத் தில் வில்லங்கம் ஏதுமில்லை என் றும் அதற்கு கடன் வழங்கலாம் என்றும் வங்கிக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதிய வழக்கறிஞர் யூனுஸ் மெமோனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அஹுஜாக்கள் இருவருக் கும் 3 கோடி ரூபாய்க்கும் அதிக மான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. பகவான்ஜி ஜோ‌ஷி, மெமோன் ஆகியோருக்கு தலா ரூ.4.3 லட்சம், ரூ.4.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

தந்தையும் மகனுமான அஹுஜா இணை வங்கியை ஏமாற்றுவதை வழக்கமாக கொண் டிருப்பவர்கள் என்றும் அவர் களுடன் ஜோ‌ஷியும் இதற்கு முன்பு வேறு குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றவர்கள் என்றும் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிதேந்த்ர ஷர்மா கூறினார். வங்கி மோசடி பற்றி கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, 2004ஆம் ஆண்டு மத்திய புல னாய்வுப் பிரிவின் சிறப்பு பணிக் குழு இந்த வழக்கைப் பதிவு செய்தது.