மண்ணுக்குள், சுவரில் இருந்த அரிய சாமி சிலைகள் மீட்பு

மண்ணுக்குள், சுவரில் இருந்த அரிய சாமி சிலைகள் மீட்பு

1 mins read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி கிராமத்தில் ஓர் அம்மன் கோயிலுக்கு அருகே கட்டடம் கட்டுவதற்காகக் குழி தோண்டியபோது மண்ணுக்குள் புதைந்திருந்த சுமார் 100 ஆண்டு கள் பழமையான நான்கு அம்மன் சிலைகள் உள்ளிட்ட ஏழு சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒரு சிலை 50 கிலோ எடை இருந்தது. (படம்: தமிழக ஊடகம்)

சிலைகள் அறந்தாங்கி தாசில் தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொல்லியல் துறையிடம் இந்தச் சிலைகளை வருவாய்த்துறை யினர் ஒப்படைப்பார்கள் என்று தெரிவிக் கப்பட்டது.

இதனிடையே, மதுரை மேலூரில் கோயிலில் அர்ச்சனை செய்யும் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த 100 ஆண்டுகள் பழமை யான திரௌபதி அம்மன் சிலையை நேற்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிஸ் அதிகாரிகள் மீட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.