புதுடெல்லி: தேர்தல் சின்னத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பி உள்ளன. இதையடுத்து பாஜக பெயரை அகற்றவேண்டும் என அந்தக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு ஒன்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவைச் சந்தித்தது. அப்போது பாஜக தேர்தல் சின் னத்தின் கீழ் அக்கட்சியின் பெயர் இடம்பெற்றுள்ளதை அக்குழுவி னர் சுட்டிக் காட்டினர்.
இல்லையெனில் பிற கட்சிக ளின் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என அவர்கள் வலி யுறுத்தினர். ஆனால் தேர்தல் ஆணையம் இக்கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது.
தேர்தல் சின்னத்தின் கீழ் உள்ள அடையாளங்கள் எந்தக் கட்சியையும் பிரதிபலிக்கவில்லை என்றும் வாக்குச்சீட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஏமாற் றம் அடைந்தன.
இது குறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிசேக் சிங்வி, மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் கட்சி சின்னத்தின் கீழ் பாஜ என்ற எழுத்துக்கள் உள்ளன என்று சுட்டிக் காட்டினார். எந்தக் கட்சியும் தங்களது கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒன்றாக பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் தங்களது கட்சி சின்னம் மிகவும் மெல்லிய அளவில் இருப்பதாக பாஜக தெரிவித்தது.
அச்சமயம் பாஜகவின் கோரிக்கையை ஏற்று அதன் கட்சி சின்னத்தை சற்றே அடர்த்தியாக்கியது தேர்தல் ஆணையம்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு
இன்று நடக்கிறது
லக்னோ: நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதைய டுத்து நேற்று முன்தினம் மாலையே வாக்குப்பதிவு நடைபெற உள்ள 9 மாநிலங் களைச் சேர்ந்த 72 தொகுதி களில் அனல் பறக்கும் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
4ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மாயாவதி, சரத் பவார் உள்ளிட்ட பல தலை வர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

