வாரணாசி: தேர்தல் செலவுகளுக்காக தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள தொகைக்கும் அதிகமாக பிரதமர் நரேந்திர மோடி செலவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்ஜய் சிங் வாரணாசி தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரதமர் மோடி நடத்திய பேரணிக்கு மட்டுமே 1.27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தேர்தல் செலவினமான 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தேர்தலுக்காக அதிகம் செலவிட்டார் என மோடி மீது ஆம் ஆத்மி புகார்
1 mins read

