லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் பல ஒன்று சேர்ந்து ஊழல் கூட்டணி அமைத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மாநிலத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சித் தலை வர்கள் தங்களது வாரிசுகளின் நலன் குறித்து மட்டுமே கவலைப் படுகிறார்களே தவிர, தேசத்தின் நலன் குறித்துக் கவலைப்பட வில்லை என்றும் சாடினார்.
பாலக்கோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் இத்தலைவர்கள் பயங்கரவாதிகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றார் மோடி.
"உண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள இக்கூட் டணி மிகப்பெரிய ஊழல் கூட்ட ணியாகும். இவர்களின் நோக்கமே மக்களுக்குப் பயன் தராத அரசை உருவாக்குவதுதான். ஆனால், எவ்வளவு முயற்சிகளை மேற் கொண்டாலும் எதிர்க்கட்சிகளால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
"சந்தர்ப்பவாதிகள் எதற்கும் உதவாத அரசைத்தான் அமைக்க விரும்புகிறார்கள். சாதியைப் பற்றிப் பேசி சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் இவர்க ளின் மந்திரம்," என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

