தமிழகத்தை நெருங்கி வரும் ஃபனி சூறாவளி

ஃபனி சூறாவளி, தமிழகத்தின் வட பகுதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்பகுதி ஆகியவற்றை நெருங்கி வருவதாக இந்தியாவின் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (30 ஏப்ரல்) மாலைக்குள் அது கரையோரப் பகுதிகளை அடையும் என  ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

சூறாவளி கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

சென்னையிலிருந்து சுமார் 1,050 கிலோமீட்டர் தூரத்திலும் ஆந்திராவின் மச்சிலிபட்டினத்திலிருது சுமார் 1,230 கிலோமீட்டர் தூரத்திலும் அந்தச் சூறாவளி தற்போது இருப்பதாக ஆய்வகத்தின் அலுவலகம் திங்கட்கிழமை (29 ஏப்ரல்) காலை தெரிவித்தது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இன்றைய தினத்திற்குள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon