கொறடா: மூன்று எம்எல்ஏக்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை

கொறடா: மூன்று எம்எல்ஏக்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை

1 mins read

சென்னை: இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசுக்கு எதிராகச் செயல்படுவதாக கூறப்படும் எம்எல்ஏக்கள் தமிமூன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் மீது இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை என அதிமுக தலைமைக் கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் நாட்களில் சம்பந்தப்பட்ட இருவரும் எப்படிச் செயல்படுகின்றனர் என்பதைக் கவனித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். "தகுதிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதை ஆதாரப் பூர்வமாக சபாநாயகரிடம் தெரிவித்துள்ளோம். அம்மூவரும் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், எத்தகைய முடிவையும் எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு," என்றார் ராஜேந்திரன்.