கரடியை வணங்கும் கிராம மக்கள்

கரடியை வணங்கும் கிராம மக்கள்

1 mins read

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கரடியைத் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் கரடி மண்புரவியை நேர்த்திக்கடனாகச் செலுத்தும் நிகழ்வையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காப்பாரப்பட்டியில் உள்ள காப்பார அய்யனார் கோவிலில் நேற்று முன்தினம் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் குதிரைப் புரவிகள் மற்றும் கரடிப் புரவிகளை நேர்த்திக்கடனாகச் செலுத்தினர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குலவையிட்ட துடன், பதுமைகளை நேர்த்திக்கடனாக தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.