தேமுதிக: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு

தேமுதிக: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு

1 mins read

சென்னை: எதிர்வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக வுக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக வுக்கு ஆதரவு அளிப்பதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் வெற்றிக்காக தேமுதிக தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது தேமுதிக. மேலும் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தொகு திகளுக்கான இடைத்தேர்தல் களில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தேமுதிக தெரி வித்திருந்தது.

அதன்படி, கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளித்திருந்தது.

தற்போது மீண்டும் ஆதரவு வழங்குவதாக அதிகாரபூர்வமாக தேமுதிக அறிவித்துள்ளது.