திசைமாறிச் செல்கிறது ஃபானி புயல்

திசைமாறிச் செல்கிறது ஃபானி புயல்

1 mins read

சென்னை: ஃபானி புயல் திசைமாறிச் செல்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஃபானி புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிலைமை மாறியுள் ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

"இந்தப் புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரைப் பகுதியையொட்டி 300 கி.மீ. வரை வரக்கூடும். பிறகு திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகரும். இதனால் ஃபானி புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. மேலும் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பும் இல்லை," என்றார் திரு பாலச்சந்திரன்.