கோல்கத்தா: நான்காவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றபோது பல இடங்களில் பாஜக, திரிணாமூல் தொண்டர் களிடையே வாக்குவாதமும் மோதல்களும் நிகழ்ந்தன.
மேற்கு வங்கத்தில் நேற்று எட்டு தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில் சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் வன்முறை மூண் டது. அம்மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் கட்சித் தொண்டர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
இதுபற்றி மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பிர்பும் தொகுதிக்கான தேர்தலில் நானூர், ராம்பூர்ஹாட், நல்ஹாட்டி மற்றும் சியூரி பகுதிகளில் எதிர் எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்த னர்.
இந்தத் தொகுதியின் துப் ராஜ்பூர் பகுதியில், கைபேசிகளுடன் வாக்கு மையங்களுக்குள் நுழைந்த வாக்காளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் வாக்காளர்களுக்கும் மத்திய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எனவே கும்பலைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சேரம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களை வாக் களிக்கவிடாமல் தேர்தலைச் சீர் குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும், அம்மாநிலத்தில் பாஜக வினரைத் தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட் டுவதாகவும் குறிப்பிட்டார்.
"மம்தாவின் திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக் கள் என்னுடன் தொடர்பில் இருக் கிறார்கள். மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது நாடு முழுவதும் தாமரை மலரும். மம்தாவிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் அவரைவிட்டு விலகுவர்," என மோடி பேசினார்.
இதையடுத்து, "உங்கள் பக்கம் ஒரு கவுன்சிலர்கூட வரமாட்டார். நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? இல்லை குதிரைப் பேரம் செய் கிறீர்களா? உங்களது பதவியின் காலாவதி தேதி நெருங்கிவிட்டது. உங்கள் மீது தேர்தல் ஆணையத் திடம் புகாரளிப்போம்," திரிணா மூல் கட்சியின் டெரிக் ஓ'பிரையன் எம்.பி. பிரதமர் மோடிக்குப் பதிலடி கொடுத்தார்.

