99 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பூஜ்ஜியம்; ஆசிரியர் பணிநீக்கம்

99 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பூஜ்ஜியம்; ஆசிரியர் பணிநீக்கம்

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 3.28 லட்ச மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது.

தேர்வில் தோல்வியடைந்த 20 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதையடுத்து தேர்ச்சி அடையாத மாணவர்களின் விடைத் தாள்களை மறுமதிப்பீடு செய்ய உத் தரவிடப்பட்டது.

அதில், தேர்வில் தேர்ச்சி அடை யாத மாணவர்களுள் 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்தது.

இந்தத் தேர்வில் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த நவ்யா எனும் மாணவி 99 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் உமாதேவி எனும் ஆசிரியர் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கியது கண்டறியப் பட்டது. எனவே அந்த ஆசிரியைக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்ட தோடு, பணிநீக்கமும் செய்யப்பட்டார்.