புதுடெல்லி: பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் தேர்தல் விதிமுறை களை மீறியதாகவும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறி காங்கிரஸ் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசா ரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.
அதில், "பிரதமர் மோடி தேர் தல் பிரசார கூட்டங்களில் வெறுப்பை உமிழும் வகையில் பேசி வருகிறார்.
"கடந்த 23ஆம் தேதி குஜ ராத்தில் அவர் வாக்களித்து விட்டு வந்த பிறகு தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டார்.
"இதுபற்றி தேர்தல் ஆணையத் திடம் புகார் அளித்தோம். ஆனால் பிரதமர் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் அளித்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.
"தேச பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தங்களது அரசின் சாதனை போல பேசி பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணை யம் தடை விதித்துள்ளது. ஆனால் அந்தத் தடையை மீறி பிரதமர் பேசி வருகிறார்.
"இதுவும் அப்பட்டமான தேர் தல் விதிமீறலாகும். இது பற்றி யும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
"பிரதமர் போலவே பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவும் ராணுவத்தைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறார்.
"எனவே பிரதமர் மீதும் அமித் ஷா மீதும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். ஆனால் மனுவில் பிரதமர் என்று மட்டுமே குறிப் பிட்டு இருப்பதாகக் கூறிய அவர், மோடி என்றும் குறிப்பிட வேண் டும் என உத்தரவிட்டார்.

