ரயிலில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரயில்வே அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட தகவல் மூலம் கடந்த பத்தாண்டுகளில் ரயில் திருட்டு தொடர்பாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் வழக்குகள் பதிவானதாகத் தெரிய வந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ரயில் திருட்டுத் தொடர்பாக 36 ஆயிரத்து 584 புகார்கள் பதிவாகின. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிக அளவாகும்.