சுடச் சுடச் செய்திகள்

ரயிலைப் பின்னோக்கி இயக்கி  உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், கோட்டா-பீனா இடையே பயணிகள் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ரயிலில் இருந்து கீழே குதிக்க முற்பட்டார். அவரைத் தடுக்கச் சென்ற வினோத் என்பவர் கால் தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

ரயில் நிறுத்தப்பட்டிருந்த பாதை மிகவும் குறுகலான பாதை என்பதால் அந்த இடத்திற்குள் மருத்துவ அவசர வாகனம் வர இயலவில்லை. இந்த இக்கட்டான சூழலில் ரயிலின் ஓட்டுநர் மிக சாதுரியமாகச் செயல்பட்டு, ரயிலைப் பின்னோக்கி இயக்கி மருத்துவ அவசர வாகனம் வருவதற்கு வழிவகுத்தார். தக்க சமயத்தில் சரியான முடிவை எடுத்து ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon